முடிவுக்கு வரும் அரசியல் விளையாட்டு கவர்னர் ஊர் திரும்பியதும் புதிய முதல்வர் பதவியேற்பு! கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பணிகளை சுற்றி சுழன்று பணியாற்றி மாநில காங். தலைவர் சிவகுமார் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்குரிய மேலிட செல்வாக்கை பயன்படுத்தி சித்தராமையா முதல்வரானார்.