விஜய் தலைமையில் உருவாகிறது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி | Secular Social Justice Coalition | CM
எழுத்து அளவு
அ-
அ+
அஸ்திவார கல்லை உருவிய தவெக
திமுக பார்முலாவை கரைத்த விஜய்
தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக கட்சி உருவெடுத்தது.
தேர்தல் முடிவுகள் வந்ததும் பெரும்பான்மை கிடைக்காமல் ஆட்சி அமைக்க தடுமாறினார் தவெக தலைவர் விஜய்.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
V.Mohan
"""முழுநேர மதக்கட்சியான முஸ்லீம்லீக்"" ஆதரவில் ஆட்சி செய்யும் தவெக எப்படி மதச்சார்பற்ற கூட்டணி ஆகும்?.தமிழ் மக்கள் மண்டையில் இன்னுமா இது உறைக்கவில்லை??? திமுகவின் இதே ஸ்டண்டை, முதல்வர் விஜயும் செய்தால் தவெக எப்படி அதற்கு மாற்றாகும்?. இது மட்டுமல்ல மக்களே திமுக கூட்டணியாக இருந்த போது அவரகள் சொன்ன, தற்போதைய தவெகவும் காப்பியடித்த இன்னொரு டயலாக். """ பாஜக வின் மதவாத ஆட்சி""". மக்களின் ஓட்டுக்களைப் பெற்று தவெக வைப் போல மற்ற கட்சிகள் ஆதரவு பெற்று மத்தியில் ஆட்சி செய்வது பாஜக கட்சி. அதுவும் சரியான ஜனநாயக முறையில் அமைந்த மத்திய அரசு. ஆனால் அனுபவமே இல்லாத தவெக. கட்சி அமைச்சர்கர்கள் இன்னமும் வீராவேசமாக திமுகவின் உளுத்துப் போன பழைய பல்லவிகளையே இன்னமும் பாடுகிறார்கள். தவெக எந்த விதத்தில் திமுகவுக்கு மாற்றாகும் ???
பிரேம் குமார்
தவெகவோடு கூட்டணி உருவாக காரணமாக இருந்த இரண்டு வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கிரீஷ் சோடெங்கர் சமீபத்தில் தனது கருத்தை வெளியிடும் போது தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் ஆட்சி மாற்ற நிகழ்வுகளுக்கு வாக்களித்த மக்களை வாய் சொற்களால் தாக்க வேண்டாம் என திமுகவிற்கு அறிவுரை கூறி இருக்கிறார். இதைத் தான் பாஜகவும் மகாராஷ்டிரா-பீகார்- மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சி அமோகமாக வெற்றி அடைந்ததற்கு வாக்கு திருட்டு போன்ற வோட்டு போட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததை கண்டித்தது. தவெக ஜெயித்தால் மக்கள் ஆதரவு ஆனால் பாஜக ஜெயித்தால் வாக்கு திருட்டா? உங்களுக்கு வந்தால் ரத்தம் -எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? தேர்தலுக்கு முன்னால் பலமான இருந்ததால் திமுகவோடு கூட்டணி . முழு தேர்தல் முடிவு வெளியான பிறகு திமுக பலமிழந்ததால் அதை ஒதுக்கி அமைச்சர் பதவிக்காக வேறு கூட்டணி. காங்கிரஸ் அதிக ஆட்டம் போடுவது வேடிக்கையாக இருக்கிறது. தவெகவை ஒற்றை பட எண்ணிக்கையில் ஐந்து கட்சிகள் ஆதரிக்க முன் வந்தாலும் அணைவரையும் சேர்த்தாலும் கூட தேவையான பெரும்பான்மைக்கு மேல் இருவர் தான் இருக்கிறார்கள் என்பதை தவெகவும் அதை ஆதரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறக்க கூடாது
Sivaraman · chennai
சமூக நீதிக் கூட்டணி என்று கூறுங்கள்.தவறே இல்லை.முஸ்லீம் லீக் என்றக் கட்சியை வைத்துக் கொண்டு மதசார்பற்ற என்ற வார்த்தையை பயன் படுத்துவது தன்னை ஏமாற்றிக்கொண்டு ஓட்டுப் போட்டவரையும் ஏமாற்றும் செயல்..ஆரம்பமே ஏமாற்று வேலை என்றால் எவ்வாறு நல்ல சக்தியாக இருக்க முடியும்?
Raja
Jalra for Actor