தமிழக சட்டசபை தேர்தலில் பாஜ மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 27 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. கடந்த முறை 4 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பி அந்த கட்சிக்கு இப்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே இருக்கிறார். இந்த தோல்வி பாஜ மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்விக்கான காரணம் குறித்து ஆராய சென்னை கட்சி அலுவலகத்தில் முக்கிய கூட்டத்தை பாஜ கூட்டியது. தமிழக பாஜ நிர்வாகிகளை தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சந்தித்தார்.