ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது

ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது
Advertisement
எழுத்து அளவு

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் "துரந்தர்". மாதவன், சஞ்சய் தத், அக் ஷய் கண்ணா, சாரா அர்ஜூன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்தனர். உளவாளி வேடத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். 1300 கோடி வசூல் செய்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‛துரந்தர் தி ரிவென்ச்" என்ற பெயரில் இதேக் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 7ம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே ஆக் ஷன் காட்சிகளாக தான் இருக்கிறது. துப்பாக்கிச் சூடு, பாம் பிளாஸ்ட், அதிரடி ஸ்டன்ட் போன்ற காட்சிகள் தான் அதிகம் நிறைந்துள்ளன. தற்போதைக்கு ஹிந்தியில் மட்டும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஓரிரு நாளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டிரைலர் வெளியாகலாம்.

துரந்தர் முதல்பாகம் ஹிந்தியில் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டனர். தற்போது துரந்தர் 2வை பான் இந்தியா வெளியீடாகவே வரும் 19ம் தேதி வெளியிடுகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக


உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

சினிமா பிரபலங்கள் ஜிம், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போதும், விமான நிலையங்களுக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பப்பராசிகள் (புகைப்படக் கலைஞர்கள்) சம்பந்தப்பட்டவர்களின்


ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர்


‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான ‛துரந்தர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‛துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியாகி


புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களையும், கை கடிகாரங்களையும் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக கருதுகிறவர்கள். அதேபோன்று விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதிலும் ஆர்வம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map