வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார்

வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார்
Advertisement
எழுத்து அளவு

பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 2021ல் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானதில் இருந்து அவரது உடல்நிலை நலிவுற்று இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்..பாலிவுட் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, வித்யா பாலன், ராணி முகர்ஜி ஆகியோர் நேரில் சென்று இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியிடம் படத்தொகுப்பு உதவியாளராக சேர்ந்து பின்னர் அவரது இயக்கத்திலேயே சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் எம்பிபிஎஸ் என்கிற படத்தில் எடிட்டராக தனது திரையுலக பயணத்தை துவங்கினார். ஆனாலும் 2005இல் பரிணீதா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தில்தான் இவர் முதன்முதலாக நடிகை வித்யா பாலனை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ராணி முகர்ஜி நடித்த மர்தானி என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்று தற்போது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தவிர வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்திய இவர் 4 வெப் சீரிஸ்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்

கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்

பாலிவுட் நடிகை ஆலியா பட், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடமும் பிரபலமானவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம்

மேலும் படிக்க

துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 கடந்த மார்ச் இறுதியில் வெளியானது. அந்தப் படமும் முதல் பாகத்தை

மேலும் படிக்க

துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு

துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு

ஹிந்தித் திரையுலகத்தில் வெளியாகும் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். ஆனால், துரந்தர் 2 படத்தை மேலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகே வெளியிட

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map