ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம்

ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி  கொடுத்த விளக்கம்
Advertisement
எழுத்து அளவு

கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார் அட்லி. இந்த படம் 1100 கோடி வசூலித்தது. ஆக்ஷன் கதையில் உருவான இந்த படம் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கானை வைத்து மீண்டும் அட்லி இயக்கப்போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்தன.

இது குறித்து அட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படம் இயக்கப் போகிறேன். ஆனால் அது ஜவான் 2 அல்ல, வேறு படம். அதோடு ஷாருக்கான் நடிப்பில் டான் படத்தின் மூன்றாம் பாகத்தை நான் இயக்குவதாக ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அட்லி.

தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 22வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர்


கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்

கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட்


துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map