ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம்

ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம்
Advertisement
எழுத்து அளவு


வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பதற்கு ஏற்ப வெள்ளித்திரை பிரபலங்களை போல சின்னத்திரை பிரபலமான இவர் செயல்படுவது யாருக்குமே தெரியாது. நடித்தால் தனக்கு மட்டுமே பலன்; மற்றவர்களும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கணவருடன் இணைந்து தொழில் நிறுவனத்தையும் துவக்கி பலருக்கு வாழ்க்கையை கொடுத்து வருகிறார். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் சீரியல் உலகில் தவிர்க்க முடியாத நடிகையான ரோஜாஸ்ரீ.


தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக ரோஜாஸ்ரீயுடன் பேசியதிலிருந்து...

ஐதராபாத் சொந்த ஊர். அப்பா மிமிக்ரி ஆர்டிஸ்ட். நடிகர்களை போல குரல் கொடுப்பார். இதனால் எனக்கும் நடிக்க ஆர்வம் சிறு வயதிலேயே இருந்தது. நகை தயாரிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர் அம்மா. இதனால் தொழில் விஷயமாக சென்னையில் குடியேற வேண்டியிருந்தது. இது சின்னத்திரையில் சிறுவயதிலேயே நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

பல சீரியல்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்தேன். பெரியவளான பிறகு நடித்த சித்தி, அண்ணி சீரியல்கள் எனக்கு "பிரேக்" கொடுத்தன. "இருக்காதோ காதல்" தெலுங்கு படத்திற்காக ராதிகாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளவயது காதலை சொல்லும் படம். இதில் என் நடிப்பை கவனித்த ராதிகா, அவரது நிறுவன சீரியல்களில் வாய்ப்பு தந்தார். இதன் மூலம் மறைந்த இயக்குனர் பாலசந்தர், ஏ.வி.எம்., நிறுவன சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். ஏ.வி.எம்., நிறுவனம் எனக்கு "தாய் வீடு" மாதிரி.

தற்போது பவித்ரா சீரியலில் "நெகட்டிவ்" ரோலில் நடித்து வருகிறேன். "பாசிட்டிவ்" கேரக்டர்களை காட்டிலும் "நெகட்டிவ்" கேரக்டர் தான் மக்களிடம் நம்மை எளிதில் கொண்டு செல்லும். இடையே சினிமா வாய்ப்புகளும் வந்தன. மறைந்த மயில்சாமி நடித்த "ஜஸ்ட் நம்பர் 18 பில்ட்அப்" படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது "கிளியோபட்ரா" படத்தில் நடித்து வருகிறேன்.

நம்மை நாம் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். நாம் அழகாக இருக்கிறோம் என முதலில் நாமே நினைக்க வேண்டும். இதுவே நம்மை மற்றவர்களுக்கு அழகாக காட்டி விடும். இதனால் பியூட்டிக்கு நான் மெனக்கெடுவதில்லை.

சீரியல், சினிமா வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் கூட அவற்றில் நடிப்பதன் மூலம் நமக்கு மட்டும் தான் பலன். மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்த போது கணவர் தொழில் செய்ய ஐடியா கொடுத்தார். அவர் ஈடுபட்டுள்ள கட்டுமானத்தொழிலில் நானும் இறங்கினேன். என் நிறுவனத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக நடிப்பு வாய்ப்புகளை குறைத்து கொண்டு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்புகளுக்கு ஒத்து கொள்கிறேன்.

ஆதரவற்றோர்களுக்காக "ஸ்மைல்" தொண்டு நிறுவனம் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் அரசுக்கு நிதி வழங்கியுள்ளேன். வெளியில் தெரியாதளவிற்கு சமூக சேவையில் ஈடுபடுகிறேன். பெண்கள் தங்கள் மீது தன்னம்பிக்கை வைத்து, பிடித்த துறைகளில் இறங்கினால் சாதிக்கலாம் என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட


சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்


ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map