அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் : சிறப்பு தோற்றத்தில் வருபவர்கள் யார்?

அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் : சிறப்பு தோற்றத்தில் வருபவர்கள் யார்?
Advertisement
எழுத்து அளவு

கடந்த ஓராண்டாக சினிமாவில் நடிப்பதை விட்டு, கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். துபாய், இத்தாலி, மலேசியா, போர்ச்சுகல், ஸ்பெயின், பெல்ஜியம் நாடுகளில் நடந்த ரேசில் பங்கு பெற்றார். சில போட்டிகளில் வெற்றியும் பெற்றார். அவர் கார் ரேஸ்க்கு தயார் ஆவது, கார் ஓட்டுவது, ரேஸ் பின்னணி தகவல்கள், ரேஸ் குறித்த பேட்டிகளை தொகுத்து கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படமாக எடுத்துள்ளார்.

இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். விஜய் இயக்கி இருக்கிறார். இந்த ஆவணப்படம் எத்தனை நிமிடம் ஓடும் என தெரியவில்லை. ஆனால், ஒரு பாகமாக இல்லாமல், பல பாகமாக வர உள்ளதாக சொல்கிறார்கள். அஜித் கார் ரேஸில் அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்கிறார்கள். மேலும் கார் ரேஸ் நடக்கும் நாடுகளுக்கு சென்று நயன்தாரா, அனிருத் உட்பட பலர் அஜித்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களின் பேட்டிகள், உலக அளவிலான கார் ரேஸ் வீரர்கள், பேட்டி, அஜித் குழுவினர் பேட்டிகளும் அந்த படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சில கோடி செலவில் அஜித் தயாரித்துள்ள படம் என்பதாலும், ஒரு ஹீரோவின் கார் ரேஸ் என்ற புதிய ஜானராக இருப்பதாலும் பிரபல ஓடிடி நிறுவனங்கள் கிளாடியேட்டஸ் படத்தை வாங்க போட்டி போடுகிறதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆவணப்படத்தில் பாடல்கள் இருக்காது என்கிறார்கள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் யாத்திசை. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில்


பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

அருண்விஜய் நடித்த வணங்கான் படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது


மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது மாளிகைப்புரம். இப்போது அதே இயக்குனர்


மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன்


எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map