அடுத்தடுத்த தோல்வி : இந்தியன் 3-ல் மீள்வாரா ஷங்கர் ?

அடுத்தடுத்த தோல்வி : இந்தியன் 3-ல் மீள்வாரா ஷங்கர் ?
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், இன்றைய தென்னிந்திய பிரம்மாண்டப் படங்களுக்கான முன்னோடியாக இருந்தவர். அவரைப் பார்த்துதான் பிரம்மாண்டமான படங்களை எடுக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூட கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கடந்த வருடம் தமிழில் வெளியான "இந்தியன் 2" படமும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியான "கேம் சேஞ்ஜர்" படமும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து தோல்விகளையே தராத ஷங்கர் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுத்திருப்பது திரையுலகினரிடமும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் அடுத்து "இந்தியன் 3" படம்தான் வெளிவர வேண்டும். அப்படத்திற்கான வேலைகளை "கேம் சேஞ்ஜர்" வெளியீட்டிற்குப் பிறகு ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுப்பதன் மூலம்தான் ஷங்கர் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரை நம்பி அடுத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி


முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?


தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map