ஆழ்கடல் அதிசயத்திற்கு கூட்டி செல்லும் ‛அவதார் 2 : பிரமிக்க வைக்கும் டிரைலர்

ஆழ்கடல் அதிசயத்திற்கு கூட்டி செல்லும் ‛அவதார் 2 : பிரமிக்க வைக்கும் டிரைலர்
Advertisement
எழுத்து அளவு

13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஹாலிவுட் படம் ‛அவதார்". 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் அதை விட 20 மடங்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

சயின்ஸ் பிக்சன் படமான இதில் கிரகங்களுக்கு இடையில் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் இந்த உலகில் வாழும் பேராசை பிடித்த மனிதனுக்கும் இயற்கையோடு இணைந்து வாழும் மற்றொரு கிரக மனிதர்களுக்கும் இடையிலான மோதலை சொன்ன விதத்தில் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக மேலும் சில பாகங்கள் வெளிவர உள்ளன.

இதன் இரண்டாம் பாகமான "அவதார் : தி வே ஆப் வாட்டர்" வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. இதன் டீசர் கடந்த மே மாதம் வெளியானது. இன்று(நவ., 2) மாலையில் டிரைலரை வெளியிட்டனர்.

முதல் பாகத்தை மிஞ்சும் அளவிற்கு பல ஆச்சர்யங்கள் இந்த டிரைலரில் உள்ளன. பிரமாண்டம் உருவாக்கம், ஆச்சர்யப்பட வைக்கும் காட்சி அமைப்புகள், ஆழ்கடல் அதிசயங்கள், அதில் வாழும் உயிரினங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மிக்க வைக்கின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் டிரைலரை பாராட்டி வருகின்றனர். அவதார் 2 டிரைலர் வெளியீட்டிற்கு படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map