சிறிய படங்களுக்கு சிக்கலை தருகிறதா ரீ ரிலீஸ் படங்கள்?

சிறிய படங்களுக்கு சிக்கலை தருகிறதா ரீ ரிலீஸ் படங்கள்?
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் போகிறது. வருடத்திற்கு சராசரியாக 250 படங்கள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக 20 படங்கள் ஒடினாலே அபூர்வமாக உள்ளது.

கடந்த வருடத்தில் பல கோடி செலவில் எடுக்கப்பட்ட படங்கள் கூட நஷ்டத்தைத் தந்த போது, சில கோடிகளில் எடுக்கப்பட்ட சில சிறிய படங்கள் தான் லாபத்தைத் தந்த படங்களாக அமைந்தன.

இந்நிலையில் சிறிய படங்கள் தற்போது புதிதாக ரீ ரிலீஸ் படங்களால் சிக்கலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்தப் படங்களை மீண்டும் திரையிடும் உரிமை மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுமார் 10 வருடங்கள் பழைய படமாக இருந்தாலும், அந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் அதிகமாகவே வருகிறார்கள். சில நாட்கள் ஓடினாலும் அந்தப் படங்கள் நல்ல லாபத்தைத் தருகின்றன. அதை தற்போது ஒரு டிரெண்டாகவே மாற்றிவிட்டார்கள்.

பொங்கலுக்கு "ஜனநாயகன்" படம் திட்டமிட்டபடி வராத காரணத்தால் கடந்த வாரமே விஜய் நடித்த "தெறி" படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள். ஆனால், தள்ளி வைத்து ஜனவரி 23ல் வெளியிடுவதாகச் சொன்னார்கள்.

"திரௌபதி 2" படத்தின் இயக்குனரான மோகன்ஜி கேட்டுக் கொண்டதை அடுத்து "தெறி" படத்தைத் தள்ளி வைத்துள்ளார் அதன் தயாரிப்பாளர் தாணு. "ஹாட் ஸ்பாட் 2 மச்" பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கும் தயாரிப்பாளர் தாணுவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இருந்தாலும் இந்த வாரம் அஜித் நடித்துள்ள "மங்காத்தா" படம் ரீரிலீஸ் ஆக உள்ளது. அந்தப் படத்தைத் தள்ளி வைக்கும்படி அவர்கள் யாரும் வேண்டுகோள் வைக்கவில்லை.

இந்த வாரம் வெளியாக உள்ள "திரௌபதி 2, ஹாட் ஸ்பாட் 2 மச், மாயபிம்பம்" ஆகியவை சிறிய படங்கள்தான்.

இனி வரும் வாரங்களிலும் சில பல ரீரிலீஸ் படங்கள் வெளியாக உள்ளன. "காதல் கொண்டேன், அமர்க்களம்" என பழைய சூப்பர் ஹிட் படங்களை டிஜிட்டல் தரத்தில் வெளியிடத் தயாராகி வருகிறார்கள். அவற்றால் புதிய சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் வர அதிக வாய்ப்புள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது


கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்


ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map