பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர்

பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர்
Advertisement
எழுத்து அளவு

1946ம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார். சில காட்சிகள் படமான நிலையில் அப்போது இருந்த தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் "இந்தப் பையன் ( எம்ஜிஆர்) ஆள் நன்றாக இல்லை, கேரக்டருக்கு பொருத்தமாக இல்லை அவனை நீக்கி விட்டு வேறொருவரை போட்டு எடுத்தால் படத்தை வாங்குவோம்" என்று கூறிவிட்டார்கள். இதனால் எம்ஜிஆர் நீக்கப்பட்டு அதன் பிறகு பி.யு சின்னப்பா அந்த படத்தில் நடித்தார்.

1947ம் ஆண்டு வெளியான "ராஜகுமாரி" தான் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த முதல் திரைப்படம். இதற்கு முந்தய படத்தில் இடையில் நீக்கப்பட்டது போன்றே இந்த படத்தின் நாமும் நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே எம்ஜிஆர் நடித்து வந்தார். அவர் நினைத்தபடியே நடந்தது ஒரு கட்டத்திற்கு மேல், எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த, தயாரிப்பாளர் ஜூபிட்டர் பிச்சர்ஸ் சோமு, மற்றும் அவருடன் இருந்த இணை தயாரிப்பாளர்களுக்கு படம் அவ்வளவாக திருப்தி இல்லை. இதனால் படத்தை இத்தோடு கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம் சோமு பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது. மீதி இருப்பதையும் எடுத்துவிட்டு அதன்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சோமு கூறியதை இணை தயாரிப்பாளர்களும் தொடர்ந்து ஒப்புக்கொண்டனர்.

இந்தப் படத்தில் எம்ஜிஆர் தினசரி சம்பளத்தில் நடித்து வந்தார். பல மாதங்கள் படப்பிடிப்பு நின்று விட்டதால் சம்பளம் இல்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டார். இதனால் சென்னைக்கு திரும்பி வேறு படத்தில் முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் நடன இயக்குனர் குமார்,"உங்களை நாயகனாக வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. ஆனால் ஜூபிட்டர் பிச்சர்ஸ் சோமு உங்களை நாயகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவர் விருப்பத்தின்படி இந்த படத்தில் நடித்து முடிக்காமல், நீங்கள் இந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியில் செல்ல கூடாது" என்று கூறி 1800 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை உங்களால் முடியும்போது திருப்பி கொடுங்கள். இதை வைத்தக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் படம் சரியில்லை என்று நினைத்த ராஜகுமாரி திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு முன்னணி நாயகன் என்ற அந்தஸ்தையும் கொடுத்தது. பின்னாளில் தனக்கு ஊக்கம் கொடுத்து பண உதவி செய்த குமாருக்கு வெளியுலகம் அறியாமல் மிகப்பெரிய உதவிகளை செய்தார் எம்ஜிஆர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட். தனுஷ் நடித்த வாத்தி, துல்கல் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை அடுத்து


சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ளபடம் “இரட்டையர்”. ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர்


‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map