குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...!

குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...!
Advertisement
எழுத்து அளவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி". திரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 10ல் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே டீசர், இரு பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றன. இப்போது படத்தின் டிரைலர் இன்று(ஏப்., 4) இரவு 9:01க்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு சிறு தாமத்திற்கு பின் வெளியானது.

படத்தின் டிரைலரை பார்க்கும்போதே இது ஒரு கேங்ஸ்டர் கதை என நன்றாகவே தெரிகிறது. ஒருகாலத்தில் கேங்ஸ்டராக இருந்த அஜித், மகனுக்காக வயலன்ஸை விடுகிறார். அதே மகனுக்காக ஒரு பிரச்னை வரும்போது மீண்டும் கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் அஜித். இதுதான் படத்தின் ஒருவரிக்கதை.

அஜித்தின் மனைவியாக திரிஷாவும், அவரது சக நண்பர்களாக பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லனாக அர்ஜுன் தாஸ் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் சிம்ரன். அஜித்தின் முந்தைய படங்களில் அவர் டான்-ஆக தோன்றிய பட கேரக்டர்களின் சாயல்களை எல்லாம் இந்த படத்தில் சேர்த்துள்ளார் ஆதிக். உதாரணத்திற்கு அமர்க்களம், தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் சாயல்கள் சில காட்சிகளில் வந்து செல்கின்றன.

நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்தின் குறும்புத்தனம் கலந்த டான் கேரக்டரில் நடித்துள்ளார் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. நிச்சயம் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். விடாமுயற்சியில் ஏற்பட்ட தோல்வியை குட் பேட் அக்லி-யில் அஜித் சரி செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map