சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கவின்
Advertisement
எழுத்து அளவு

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் கவின். அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து "டாடா" படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. இந்த வருடம் வெளிவந்த "ஸ்டார்" படம் சுமாராக ஓடியது. கவின் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் "பிளடி பெக்கர்" படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இது தவிர மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். ஆனால், கவின் தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். சுமார் 8 கோடி வரை அவர் சம்பளம் கேட்கிறார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

அவர் கதாநாயகனாக நடித்து இதுவரையில் ஒரே ஒரு படம் மட்டும்தான் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதற்குள் இப்படி சம்பளத்தை உயர்த்தினால் எப்படி என விமர்சனங்கள் எழுந்துள்ளதாம். நெல்சன், வெற்றி மாறன் தயாரிக்கும் படங்களில் நடிப்பதால்தான் இப்படி ஏற்றிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தி பின் காணாமல் போன நடிகர்களைப் பற்றியும் கவின் யோசித்துப் பார்க்க வேண்டும் என சில அனுபவஸ்தர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map