மீம்ஸ் கிண்டலை ஜாலியாக எடுத்துக் கொண்ட மாளவிகா மோகனன்

மீம்ஸ் கிண்டலை ஜாலியாக எடுத்துக் கொண்ட மாளவிகா மோகனன்
Advertisement
எழுத்து அளவு

ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அந்தப் படத்தில் அவரைப் பார்த்த ஞாபகம் எத்தனை பேருக்கு இருக்குமோ தெரியாது. ஆனால், "மாஸ்டர்" படத்தில் விஜய் ஜோடியாக அவர் தான் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.

"மாஸ்டர்" படத்தில் விஜய், விஜய் சேதுபதி இருவரின் நடிப்புக்கு முன்னால் காணாமல் போய்விட்டார் மாளவிகா மோகனன். அவருடைய நடிப்பைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. பல காட்சிகளில் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்ற நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகம்.

அதிலும் "மாஸ்டர்" படம் ஓடிடியில் வெளிவந்த பிறகு அதிலிருந்து மாளவிகாவின் காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் அடித்து பல மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்தன. அவற்றை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா. அவரைக் கலாய்க்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு உண்மையாகவே அப்பாவியாக இருக்கிறார் போலிருக்கிறது.

தன்னைப் பற்றி வெளிவந்த சில மீம்ஸ்களை அவரே பகிர்ந்து, “என்னைப் பற்றிய சொந்த மீம்ஸ்களுக்கு நான் கொஞ்சம் லேட்தான். ஆனால், இவை எல்லாம் மிகவும் காமெடியாக உள்ளன நண்பர்களே. மகிழ்ச்சியாகவே அதில் சிலவற்றைப் பகிர்கிறேன். இதில் டூத்பேஸ்ட் பற்றிய மீம்ஸுக்கு சிரித்துத் தள்ளிவிட்டேன். உங்களைப் பார்த்து நீங்களே சிரிக்காவிட்டால் வாழ்க்கை மிகவும் போரடித்துவிடும், இல்லையா,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map