வெப் தொடரில் மனோ பாலாவின் வித்தியாச தோற்றம்

வெப் தொடரில் மனோ பாலாவின் வித்தியாச தோற்றம்
Advertisement
எழுத்து அளவு

ரஜினிகாந்த் நடித்த "ஊர்காவலன்", விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

"சதுரங்க வேட்டை" "பாம்பு சட்டை" உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது மனோ பாலா வித்தியாசமான தோற்றத்தில் முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். மிஸ்டர் உத்தமன் என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ஸ்டே டியூன் என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்

மேலும் படிக்க

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்

மேலும் படிக்க

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map