மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் 2 துவக்க விழா : மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களை காக்க வைத்த நயன்தாரா
Advertisement
எழுத்து அளவு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பில் நயன்தாரா நடித்து, வெளிவந்த "மூக்குத்தி அம்மன்" படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. நயன்தாராவே நாயகியாக தொடருகிறார். சுந்தர் சு இயக்குகிறார். வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை விழாவே சென்னையில் இன்று(மார்ச் 6) சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாய் நடந்தது. இதற்காக பிரத்யேக செட் போட்டு விழாவை நடத்தினர்.

விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் தாணு, நடிகைகள் குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி, யோகி பாபு, கருடா ராம், கேஎஸ் ரவிக்குமார், ரெஜினா, அபிநயா உள்ளிட்ட பலர் திரைப்பிபலங்களும் பங்கேற்றனர். விழாவிற்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் நயன்தாரா அரைமணிநேரம் தாமதமாகவே வந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர் கேரவனில் அமர்ந்து ரெடியானார். இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பொறுமையிழந்தனர். படத்தின் பூஜை நடக்கும் முன்பே ஜெயம் ரவி, தாணு ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி சென்றனர்.

பின்னர் 10.30 மணிக்கு விழாவிற்கு வருகை தந்தார் நயன்தாரா. பின்னர் படத்தின் பூஜை நடந்தது. தொடர்ந்து படத்தின் முதல் ஷாட்டும் படமாக்கப்பட்டது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map