என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ரசிகர்களுக்கு பூச்சூடுகிறார் நதியா

என் இளமைக்கு காரணம் உங்கள் அன்பு! ரசிகர்களுக்கு பூச்சூடுகிறார் நதியா
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவில், 1980- 90களில் கனவு நாயகியாக இருந்தவர் நடிகை நதியா. "பூவே பூச்சூடவா" படத்தில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து, வெளிநாட்டில் "செட்டில்" ஆகிவிட்டார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, "எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படத்தில் "ரீ என்ட்ரி" கொடுத்த நதியா, தாமிரபரணி, பட்டாளம், சண்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து "மாஸ்" காட்டினார். தற்போது தோனி தயாரிப்பு நிறுவனத்தில், அம்மா "கேரக்டரில்" நடித்துள்ளார். கோவை வந்த அவரிடம் ஒரு சில நறுக் கேள்விகள்; நறுக் பதில்கள்.

எல்.ஜி.எம்., படத்தை பற்றி கூறுங்களேன்...
முதலில் தோனி படம் எடுக்கிறாரா என்கிற சந்தேகம் வந்தது. பின்னர் இந்த படத்தில் இளைஞர்கள் பட்டாளம், நல்ல கதை அமைந்ததால் படத்தில் நடித்துள்ளேன். எல்.ஜி.எம்.,யில் "ஓபன் மைண்ட்" கொண்ட அம்மாவாக நடித்தது, இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும். படம் முழுவதும் "பன்" ஆக எடுக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
தெலுங்கு படத்தில் "பிசியாக" இருந்து விட்டேன். எனக்கென தமிழ் ரசிகர் பட்டாளம் உள்ளது. நல்ல கதை அமைந்தால், கட்டாயம் படத்தில் நடிப்பேன். என்னுடைய வயதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடையாது. வயதுக்கு தகுந்த கதை அமைந்தால், கண்டிப்பாகநடிப்பேன்.

சினிமாவில் வில்லியாக நடிக்க வாய்ப்பு வந்தால்?
சினிமாவில் வில்லியாக நடிக்க விரும்பவில்லை. நல்ல "ஆக் ஷன்" படத்தில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை; ஆனால், அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன்.

நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பதன் ரகசியம்?
இவ்வளவு ஆண்டுகளாக ரசிகர்கள் எல்லோரும், என்னை அன்போடு பார்ப்பதால்தான், நான் இன்றும் இளமையாக இருக்கிறேன். வாழ்க்கையில் அன்பு தான் முக்கியம். உடலை கட்டுக்கோப்பாக வைக்க, எல்லா உணவும் சாப்பிடலாம். ஆனால் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். முடிந்த அளவு நடந்து செல்ல பழக வேண்டும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்


ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

தெலுங்கில் ராம்சரண் தற்போது நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது. கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகியுள்ள


எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் அறிமுகமானார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய அந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்த

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map