தூக்கப் பேச்சு - அஷ்வினுக்கு எழும் எதிர்ப்புகள்

தூக்கப் பேச்சு - அஷ்வினுக்கு எழும் எதிர்ப்புகள்
Advertisement
எழுத்து அளவு

"குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஷ்வின். நிகழ்ச்சியில் அவரை அதிகம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக கோமாளியாக இருந்த ஷிவாங்கி நிறைய சுவாரசியமான விஷயங்களைச் செய்தார். அவைதான் அஷ்வின் மீதான ரசிகர்களின் கவனிப்பு அதிகம் வரக் காரணமாக இருந்தது. ஆனால், அவை தன்னால்தான் அதிகம் ஏற்பட்டதாக அஷ்வின் தப்புக் கணக்கு போட்டிருப்பார் போலிருக்கிறது.

அஷ்வின் கதாநாயகனாக நடிக்கும் "என்ன சொல்லப் போகிறாய்" படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அஷ்வின், “என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை "என்ன சொல்ல போகிறாய்" மட்டும்தான்,” என்று பேசினார்.

தன்னிடம் கதை சொன்ன அந்த 40 பேரைக் கிண்டலடிக்கும் விதத்தில், அஷ்வினின் இந்தப் பேச்சு உதவி இயக்குனர்களிடமும், இயக்குனர்களிடமும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சில இயக்குனர்கள் அஷ்வினைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் உள்ளனர்.

அஷ்வின் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் இந்த அளவிற்கு திமிராகப் பேசுவதா என திரையுலகத்திலும் பலர் அவரைத் திட்டி வருவதாகவும் தகவல்.

தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அஷ்வின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம்


ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம்


மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக


சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தோழியான பாடகி


சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு வெற்றி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‛கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மற்றும் உலக அளவில் சேர்த்து இந்த வாரத்தில் 200 கோடியை தாண்டும் என்று

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map