துல்கர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கத்தில் பான் இந்தியா படம்

துல்கர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கத்தில் பான் இந்தியா படம்
Advertisement
எழுத்து அளவு

தமிழ், தெலுங்கில் இயக்குனராக, நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள "ப்ரோ" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இந்த வாரம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.

பேட்டி ஒன்றில் அவர் அடுத்து இயக்க உள்ள படங்கள் பற்றிய தகவலைச் சொல்லியுள்ளார். விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அடுத்து துல்கர் சல்மான் நடிக்க, ராணா டகுபட்டி தயாரிக்கப் போகும் பான் இந்தியா படம் ஒன்றையும் இயக்க உள்ளாராம். இது பற்றிய அறிவிப்புகள் அடுத்து வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ராணா டகுபட்டி குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக திரைப்படத் தயாரிப்பில் உள்ளனர். அவரது தாத்தா ராமா நாயுடு ஆரம்பித்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழில் “வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, மைக்கேல் ராஜ்"" ஆகிய படங்களைத் தயாரித்துள்ளனர். கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான "ப்ரின்ஸ்" படத்தை இணைந்து தயாரித்தனர். ராணா டகுபட்டி சில பிரம்மாண்டப் படங்களைத் தயாரிக்க உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில்

ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில்

160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்!

160 கோடியில் சொகுசு பங்களா கட்டி வரும் பிரபாஸ்!

ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் டிமான்டி காலனி-3

ஜூன் திரைக்கு வரும் அருள்நிதியின் டிமான்டி காலனி-3

கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த்

கருப்பு வெற்றி : ஆர்ஜே பாலாஜியைப் பாராட்டிய ரஜினிகாந்த்

அரசன்க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்!

அரசன்க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map