பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்…

பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்…
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். "கோமாளி" படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவது படத்திலேயே இயக்கம், நடிப்பு மாறி, அடுத்து நடிப்பில் மட்டும் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

அவர் கதாநாயகனாக அறிமுகமான "லவ் டுடே" படத்தில் மலையாள நாயகியாக இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது படமான "டிராகன்" படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மூன்றாவது படமான "டியூட்" படத்தில் மமிதா பைஜு என அவர்களும் மலையாள கதாநாயகிகள்தான்.

தொடர்ந்து மலையாள கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்து ஹாட்ரிக் 100 கோடி சாதனையைப் பெற்றுள்ளார். சினிமாவில் கதை, இயக்கம், இசை, நடிப்பு எனப் பேசினாலும் ராசி, சென்டிமென்ட் என்றும் பேசுவார்கள். அந்த விதத்தில் மலையாள ஹீரோயின்களின் ராசி, பிரதீப் ரங்கநாதனுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.

அவரது அடுத்த படமான "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தில் மங்களூருவைச் சொந்த ஊராகக் கொண்ட கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள கதாநாயகிகளின் ராசி போல மங்களூரு நாயகியின் ராசியும் பிரதீப்புக்குக் கை கொடுக்குமா என்பதை டிசம்பர் 18 வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கிளிம்ப்ஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்த டிராகன்

கிளிம்ப்ஸ் வீடியோவில் புதிய சாதனை படைத்த டிராகன்

டீசர், டிரைலர் வெளியீடுகள் போல ஒரு படத்தை அறிமுகப்படுத்துவதற்கு கிளிம்ப்ஸ் வீடியோ என ஒன்றை வெளியிடும் பழக்கமும் இருக்கிறது. இதற்கு முன்பு இம்மாதிரியான வீடியோக்கள் சில


விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கிறாரா சூர்யா?

விஜய் விட்ட இடத்தைப் பிடிக்கிறாரா சூர்யா?

தமிழ் சினிமா உலகில் இன்றைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நடிகராக விளங்கியவர் விஜய். அவருடைய படங்கள் சுமாராக இருந்தால் கூட 100 கோடி, 200 கோடி என வசூலிக்கும். கடந்த 10 வருடங்களில்


ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு, தான் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் அசிங்கம்


ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி

தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம்


மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள கருப்பு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் இதுவரை இந்திய அளவில் 100 கோடி வசூலித்திருப்பதாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map