தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் : அமைதியான பிரகாஷ்ராஜ்

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் :  அமைதியான பிரகாஷ்ராஜ்
Advertisement
எழுத்து அளவு

தெலுங்கு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரப்போவதால் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் பிரச்சாரங்கள் சூடு பறந்த நிலையில் பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்கிற வாதம் முன் வைக்கப்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. இந்த நிலையில், பிரகாஷ்ராஜூம்,விஷ்ணு மஞ்சும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன நலத்திட்டங்களை செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் போட்டா போட்டியிலும் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது திடீரென்று அமைதியாகி விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இனிமேல் நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பிரச்சாரம் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாகவும் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். அதன்காரணமாக மற்றவர்கள் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளுக்கும் எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛என் இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி

‛என் இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி

புதுடில்லி : காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட்


அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய ஆர்ஆர்ஆர் ஹீரோக்கள்

அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய ஆர்ஆர்ஆர் ஹீரோக்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அது மட்டுமல்லாது, என்டிஆர், ராம் சரண்


விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள்

விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் முதல்வரான பின் தமிழக


தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி

தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவியின் 158வது படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. வால்டர் வீரய்யா படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி, இயக்குனர் பாபி கொல்லி


சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர்

சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர்

தமிழ் சினிமாவிலிருந்து மூன்று பேர் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாக காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த எண்ணிக்கை தற்போது நான்கு ஆக அதிகரித்துள்ளது.இன்று

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map