ஏப்ரல் 21ல் பொன்னியின் செல்வன் 1 மீண்டும் ரிலீஸ் ?

ஏப்ரல் 21ல் பொன்னியின் செல்வன் 1 மீண்டும் ரிலீஸ் ?
Advertisement
எழுத்து அளவு

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிப்பில் "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று பெரிய வசூலைக் குவித்தது.

அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகியது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 26 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது. இதனிடையே, "பொன்னியின் செல்வன் 2" வெளியாவதை முன்னிட்டு, அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி "பொன்னியின் செல்வன் 1" படத்தை வெளியிட உள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், “மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென…

அவர் பதில்….,” என மணிரத்னத்தின் வாட்சப் பதிலை வெளியிட்டுள்ளார். அதில்தான் மணிரத்னம் முதல் பாக வெளியீடு பற்றி பதிலளித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற "பொன்னியின் செல்வன் 2" டிரைலர் வெளியீட்டின் போது "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகத்தையே தான் இன்னும் பார்க்கவில்லை என பார்த்திபன் பேசியிருந்தார். அதை பல ரசிகர்களும் கிண்டலடித்திருந்தனர்.

ஏப்ரல் 21ல் முதல் பாகம் மீண்டும் வெளியாகும் போதாவது பார்த்திபன் பார்ப்பாரா ?. ஒரு வேளை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநலமாக முதல் பாகத்தை மீண்டும் வெளியிடுங்கள் என கேட்டிருப்பாரோ ?.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map