‛எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு - சூரியின் கொட்டுக்காளி டிரைலர் வெளியானது

‛எங்க  வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு - சூரியின் கொட்டுக்காளி  டிரைலர் வெளியானது
Advertisement
எழுத்து அளவு

விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வருகிற 23ம் தேதி திரைக்கு வரும் படம் கொட்டுக்காளி. வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போலவும், அதற்கு சிகிச்சை கொடுப்பதற்காக வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிரைலரின் முதல் காட்சியில் ஒரு சேவலை கயிற்றால் கல்லில் கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள். அதை சோகத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் படத்தின் நாயகி அன்னா பென். இந்த சேவலுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாயகனாக நடித்த இரண்டு படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விளையாட்டு தொடர்பான படத்தில் பவிஷ்

விளையாட்டு தொடர்பான படத்தில் பவிஷ்

நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ், ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தனுஷ் இயக்கினார். சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. அடுத்து லவ் ஓ லவ்


மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நிவேதா பெத்துராஜ்

மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நிவேதா பெத்துராஜ்

‛‛ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். துபாயில் வசித்து வரும் இவர் 2023ம்


அதிகபட்ச கட்டணம் 450, கேளிக்கை வரி நீக்கம் : முதல்வருக்கு 10 அம்ச கோரிக்கையை வைத்த திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள்

அதிகபட்ச கட்டணம் 450, கேளிக்கை வரி நீக்கம் : முதல்வருக்கு 10 அம்ச கோரிக்கையை வைத்த திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள்

தமிழக முதல்வராக சினிமா துறையை சேர்ந்த நடிகர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனால் தான் வளர்ந்த துறைக்கு முதல்வர் நிச்சயம் ஏதாவது நல்லது செய்வார் என தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பல்வேறு


கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால்

கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால்

சினிமா நடிகர்கள் பலரும் அவர்களது கார்களில் பயணிப்பதைத்தான் வழக்கமாக வைத்திருப்பார்கள். நீண்ட தூரப் பயணம் என்றால் ரயில் அல்லது விமானங்களில் மட்டுமே இருக்கும். உள்ளூரில் பயணிக்க


திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி

திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மே 21ல் வெளியான மலையாளப் படம் திரிஷ்யம் 3. உலக அளவில் இப்படம் முதல் நாள் வசூலாக 50 கோடியே 35 லட்சம் வசூலித்துள்ளதாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map