மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16

மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரேநாளில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் மே 16ம் தேதியன்று வெளியாக உள்ளது.

சந்தானம் நடித்துள்ள "டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்", சூரி நடித்துள்ள "மாமன்", யோகி பாபு நடித்துள்ள "ஜோரா கைய தட்டுங்க" ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் சந்தானம் நடித்துள்ள படம் ஹாரர் காமெடி படமாகவும், சூரி நடித்துள்ள படம் சென்டிமென்ட் படமாகவும், யோகிபாபு நடித்துள்ள படம் க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடிப்பதிலிருந்து தற்போது காமெடியனாகவும் மீண்டும் நடிக்க உள்ளார். யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பார். சூரி இனிமேல் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகம்தான். இவர்கள் மூவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் படங்களாக உள்ளன. படங்கள் நன்றாக இருந்தால் மூவருமே வெற்றி பெறலாம்.

இவர்களது படங்களுடன் நவீன் சந்திரா, அபிராமி நடித்துள்ள "லெவன்" படமும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எனக்கு பிடித்த படம் ரிதம்: அர்ஜூன் பேட்டி

எனக்கு பிடித்த படம் ரிதம்: அர்ஜூன் பேட்டி

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map