ஜுன் 20ல் மும்முனைப் போட்டி

ஜுன் 20ல் மும்முனைப் போட்டி
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமா ஒரு "ஹிட்" படத்தைப் பார்த்து 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அடுத்த ஒரு "ஹிட்" எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து சில முக்கிய படங்களும், முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளது. அவற்றில் எது வரவேற்பைப் பெறும் என்பதை படம் வரும் வரையில் யாராலும் யூகிக்க முடியாது என்ற நிலைதான் தற்போது உள்ளது.

இந்த வாரம் ஜுன் 20ம் தேதி தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மாந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள "குபேரா" படம் வருகிறது. "வாத்தி" படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள படமாக இப்படம் அமைந்துள்ளது. "வாத்தி" போல தெலுங்குப் பின்னணியுடன், கதைக்களம் என அனைத்துமே தெலுங்கு வாடையுடன் இந்தப் படத்தில் இருக்குமா என்பது கேள்வியாக உள்ளது. படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்ததாக தகவல் எதுவும் இல்லை. அதுதான் இந்தப் படம் மீதான சந்தேகமாக உள்ளது.

அதர்வா, நிமிஷா விஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரசன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க ஜிப்ரான் பின்னணி இசையமைக்க உருவாகியுள்ள படம் "டிஎன்ஏ". கடந்த சில வருடங்களாகவே தமிழில் வெற்றியைப் பதிக்கத் தடுமாறிக் கொண்டிருக்கும் அதர்வா இந்தப் படம் மீது அதிக நம்பிக்கையுடன் உள்ளார். 2019ல் "மான்ஸ்டர்" வெற்றிப் படத்தைத் தந்த நெல்சன் இயக்கத்தில் 2023ல் வெளிவந்த "பர்ஹானா" சரியாகப் போகவில்லை. இருவருக்குமே இந்தப் படத்தின் வெற்றி மிக அவசியம்.

விக்ரம் ராஜேஷ்வர், அருண் கேசவ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், ராஜேந்திரன், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்". தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே நகைச்சுவைப் படங்களுக்கு கடும் பஞ்சம். காமெடிப் படம் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்களும் சிரிக்க வைப்பதில்லை. இந்தப் படத்தில் இன்றைய சில நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளார்கள். காமெடிக்காக ஏங்கியிருக்கும் ரசிகர்களை இவர்கள் சிரிக்க வைப்பார்களா அல்லது "கேங்கர்ஸ்" போல இந்த "கேங்ஸ்டர்ஸ்" ஏமாற்றுவார்களா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

ஓடிடியில் லீட் பண்ணுவாரா லீடர் : இந்த வாரப் பட்டியல் வெளியானது...!

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார்

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம்

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map