விக்ரம் டிரைலர் சாதனையை முறியடித்த தக் லைப் டிரைலர்
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ள படம் "தக் லைப்". இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டிரைலர்களை வெளியிட்டனர். இதில் தமிழ் டிரைலர் தற்போது 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கமல்ஹாசன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "விக்ரம்" படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை தற்போது "தக் லைப்" முறியடித்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி, 24 மணி நேரம் முடிய இன்னும் ஒரு பகல் இருக்கிறது. அதனால், பார்வைகள் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு நடித்து வெளிவந்த "பத்து தல" படத்தின் டிரைலர், 24 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே அவரது அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதையும் "தக் லைப்" டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தக் லைப்" படத்தின் ஹிந்தி டிரைலர் 2 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.