இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கிறார்கள் - தேவா பேட்டி

இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கிறார்கள் - தேவா பேட்டி
Advertisement
எழுத்து அளவு

மதுரையில் இசை அமைப்பாளர் தேவாவின் Live in concert என்ற இசை நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மதுரை வந்த தேவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் "வாராரு வாராரு அழகர் வாராரு என்ற பாடல்" ஒலித்துக் கொண்டே இருக்கும். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மதுரையில் அடுத்த மாதம் ஜனவரி 18ல் ஒத்தக்கடை பகுதியில் இந்த இசைக் கச்சேரி 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும் அவர் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார்.

எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பண்ண விருப்பமில்லை. இசை வேலை அதிகம் இருப்பதால் நடிக்க விரும்பவில்லை. தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது.

கந்த சஷ்டி கவசம் பாடல் சூரியன் படத்தில் 18 வயதில் பாடலைப் போல சேர்த்து இசையமைத்தேன் செய்தேன். கதைக்கு ஏற்ற போது சேர்க்கப்படுகிறது ஆனால் அதை காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் பெண் உயிர் இழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து தெரியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை, அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்.

இப்போது உள்ள இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்க வேண்டும்.

எனது பாடல் 35 ஆண்டுகளுக்கு பிறகும் தற்பொழுதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன். மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது அதற்காக காத்திருக்கிறேன். இசைமையைப்பாளர்கள் நடிகராக மாறுவது அவர்களின் தனித்திறமை" என கூறினார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; காட்டாளன் படக்குழு வேண்டுகோள்

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map