சிம்பு 48ல் இரண்டு சிம்பு...! - போஸ்டர் வைரல்
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. நாயகியாக தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. வரலாற்று படமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார்.
நாளை(பிப்., 3) சிம்புவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு சிம்பு நேருக்கு நேர் மோதுவது போன்றும், பின்னணியில் போர்கள காட்சிகள் மாதிரியான தோற்றமும் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. படத்தை தலைப்பை வெளியிடவில்லை. மாறாக அதில் ‛STR 48" என வாள் வடிவில் வெளியிட்டுள்ளனர்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.