சிறப்புச்செய்திகள்:

ரிலீஸை உறுதி செய்த இரண்டு வானம்

ரிலீஸை உறுதி செய்த இரண்டு வானம்
Advertisement
எழுத்து அளவு

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த சில வருடங்களாக "இரண்டு வானம்" என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். முழுக்க முழுக்க காதல் மற்றும் அட்வென்ச்சர் ஜானரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தை முதலில் இவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்காக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பை 160 நாட்கள் கடந்தும் படப்பிடிப்பின் நிறைவில் தாமதம் ஆனதால் தள்ளிப்போனது . தற்போது இரண்டு வானம் படம் இவ்வருட சம்மருக்கு திரைக்கு வருகிறது என புதிய போஸ்டரின் மூலம் அறிவித்துள்ளனர். கூடுதலாக, இப்படம் மே 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்

மேலும் படிக்க

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்

மேலும் படிக்க

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map