ஜெயிலர் 2 படத்தில் மீண்டும் வசந்த் ரவி?
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த படம் "ஜெயிலர்". அப்படத்தில் ரஜினிகாந்த் மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார்.
காவல் துறை அதிகாரியான வசந்த் ரவி காணாமல் போக, மகனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னாள் ஜெயிலர் ஆன ரஜினிகாந்த் இறங்குகிறார். கடைசியில் தனது மகன் வசந்த் ரவி தான் சிலை கடத்தல்காரன் என்பது அப்பா ரஜினிக்குத் தெரியவர அவரே மகனை சுட்டுத் தள்ளுகிறார். இதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
முதல் பாகத்தில் இறந்து போன வசந்த் ரவி, இப்போது இரண்டாம் பாகத்தில் மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. "ஜெயிலர் 2" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் கேக் வெட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தது. அதில் வசந்த் ரவியும் இருக்கிறார். அதனால்தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
"ஜெயிலர்" முதல் பாகத்தில் குண்டடிபடும் வசந்த் ரவி தடுமாறிக் கொண்டிருக்க, நடந்து வரும் ரஜினியுடன் படம் முடிவடைந்தது. ஒருவேளை குண்டடிபட்டவரை உயிர் பிழைக்க வைத்திருப்பார்களோ? அல்லது அதுவே ஒரு செட்டப்பாக கூட இருக்கலாம்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.