மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம்

மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம்
Advertisement
எழுத்து அளவு


விக்ரம் நடிப்பில் "பொன்னியின் செல்வன், தங்கலான், வீரதீர சூரன்" என வருடத்திற்கு ஒரு படம் தவறாமல் வெளியாகி வருகிறது. அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் தற்போது மூணாறு பகுதியில் முகாமிட்டுள்ள விக்ரம், அங்குள்ள தலையார் எஸ்டேட் பகுதியில் காலை நடைபயிற்சிக்காக சென்றுள்ளார்.

அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட அங்கிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய விக்ரம், "அண்டங்காக்கா கொண்டக்காரி" என்கிற பாடலுக்கு அவர்களுடன் இணைந்து ஆடவும் செய்தார். இது குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரம், "ஒரு நடைபயிற்சிக்கு சென்றேன், ஒரு நினைவோடு திரும்பி வந்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள்

சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள்


அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து

அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து


சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா

சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map