எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம்

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம்
Advertisement
எழுத்து அளவு

சித்தா இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் "வீர தீர சூரன்". இப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்ரம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பணியாற்றியது குறித்து அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று சொன்னவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். இதில் நடித்திருக்கும் அனைவருக்கும் வெவ்வேறு பரிமாணங்கள் இருக்கும். நல்லவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்களாகவும் இருப்பார்கள்.

நானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவரது இயக்கத்தில் வெளியான "வாலி" படமும், என்னுடைய நடிப்பில் வெளியான "சேது" படமும் சமகாலகட்டத்தில் வெளியானது. நாங்கள் இருவரும் பல விருதுகளை சமமாக வென்றோம். அதன்பிறகு அவர் நடிக்க வந்து விட்டார். அவருடைய நடிப்பை பார்த்தேன்,ரசித்தேன்.

"ஸ்பைடர்" படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அந்த வழியாக கடந்து சென்றேன். அப்போது அவர் மகேஷ்பாபு உடன் நடிப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான "மார்க் ஆண்டனி", "மாநாடு", "டான்" என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ, அல்பசினோ போன்ற நடிகர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வசனத்திலும் தனித்துவத்தை காட்டுகிறார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது."

இவ்வாறு விக்ரம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது


கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்


ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map