சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம்

சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம்
Advertisement
எழுத்து அளவு

"சுப்பிரமணியபுரம்" படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். குழந்தைத்தனமான முகத்தோற்றம், மதுரை தமிழ் என கவனிக்க வைத்தார். "நாடோடிகள்" படத்திற்கு பிறகு "நட்புக்காக" இமேஜும் சேர்ந்து கொண்டது. சில சொந்த படங்கள் தயாரித்த வகையில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார். அந்த நேரத்தில் கொரோனா தொற்றும் வந்ததால் சென்னையை காலி செய்து விட்டு மதுரையிலேயே குடியேறி விட்டார்.

தற்போது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மதுரையிலேயே குடியிருக்கிறார். படப்பிடிப்பு எங்கே என்று சொன்னால் மதுரையில் இருந்து நேராக அங்கு வந்து விடுவார் படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை திரும்பி விடுவார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அப்போது மலையாள நடிகர்களை கவனித்தேன். எல்லோருமே அவரவர் சொந்த ஊரில் இருந்து நடிக்க வருகிறார்கள், படப்பிடிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள். சொந்த ஊரில் விவசாயியாக, வியாபாரியாக, சமூக சேவகராக இன்னொரு முகத்துடன் வாழ்கிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பிறகு ஏன் நாம் மட்டும் சென்னையிலேயே இருக்கிறோம், நம்ம மண், நம்ம ஊர் என்று கிராமத்திலேயே வாழத் தோன்றியது. சினிமாவை வீட்டுக்குக் கொண்டு வருவதில்லை. இங்கே சினிமா சம்பந்தமாக யாரையும் சந்திக்கிறதில்லை. ஷூட்டிங் இல்லையென்றால் விவசாயம் செய்து கொண்டு கிராமத்து ஆள் மாதிரியே இருக்கிறேன்.

எங்க ஊரில் யாரும் என்னோடு செல்பி எடுத்துக் கொள்வதில்லை. ரோட்டில் நடந்து கடைக்குப் போவேன். சைக்கிளில் போவேன். வீட்டுக்கு வெளியே நிற்கிறேன். என்னை மாமா, மச்சான்னு கூப்பிட்டுப் பேசுறாங்க. சினிமா நிரந்தரம் இல்லை . சினிமா ஆண்டாண்டு காலமாக அப்படியே அழியாமல் இருக்கும். ஆனால் சினிமாவுக்கு வருகிற நடிகர்கள் ஒவ்வொரு தடவையும் மாறிக்கிட்டே இருக்காங்க.

சினிமாவிற்கு வருகிற யாரும் நிரந்தரம் இல்லை. சினிமாக்காரனா பெரிய ஆளுன்னு நினைத்துத் தலைக்கனம் வந்திடாமல் இருக்க இந்த வாழ்க்கை உதவுகிறது. கிராமத்து மக்களும் என்னை ஒரு சாதாரண ஆளாக இருக்கவிடுறாங்க. இந்த அமைதியை, கூட்டுக் குடும்பமாக இருக்கிறதைத் தொலைக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்.

இவ்வாறு சசிகுமார் கூறியுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில்


போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு.

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களிலும் அவரது மூத்த மகளாக நடித்தவர் நடிகை அன்சிபா ஹாசன். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியின்றி இணைச்


விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி

இயக்குனர் சிவாவின் தம்பி, நடிகர் பாலா. தமிழில் ‛‛அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரது


கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில்


ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஊர்வசி இணைந்து 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ‛பரிமளா அண்ட் கோ என்ற படத்தில் ஜோடியாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map