ஜுன் மாதத்தில் தான் ஜனநாயகன் ரிலீஸ்?

1
ஜுன் மாதத்தில் தான் ஜனநாயகன் ரிலீஸ்?
Advertisement
எழுத்து அளவு


வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள கடைசி படமான "ஜனநாயகன்" படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக வெளியீடு தள்ளிப் போனது. தேர்தல் முடிந்து மே 4ம் தேதி முடிவுகள் வர உள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தை மே 7 அல்லது 14 வெளியிடலாமா என்றும் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், இவ்வளவு அவசரத்தில் படத்தை வெளியிட வேண்டாம். தேர்தல் முடிவுகள் வந்து புதிய அரசு பதவியேற்ற பின்பு சிறிது இடைவெளியில் விட்டால்தான் அரசியல் ரீதியான பாதிப்பு எதுவும் படத்திற்கு வராது என தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறதாம்.

மேலும், "ஜனநாயகன்" தயாரிப்பு நிறுவனத்தின் கன்னடப் படமான "டாக்சிக்" படத்தை ஜுன் 4ம் தேதி வெளியிட இருந்தார்கள்.. நேற்று அப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்கள். எனவே, அந்தத் தேதியில் "ஜனநாயகன்" படத்தை வெளியிடலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறதாம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

கருத்துகளை எழுதுங்கள்...

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்தாரா என்டர்டெயின்மென்ட். தனுஷ் நடித்த வாத்தி, துல்கல் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை அடுத்து


சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ளபடம் “இரட்டையர்”. ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர்


‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

‛கருப்பு ஸ்டார் பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில்

கடந்த இரண்டு மாதங்களாக சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரிஷாவுக்கு, சமீபத்தில் வெளியான ‛கருப்பு திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியையும்


‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

‛வாரண்ட் வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள்

திரைப்படங்களில் சென்சாருக்கு உட்பட்டு தாங்கள் சொல்ல நினைத்த பல விஷயங்களை, பல வசனங்களைப் பல இயக்குனர்களால் சொல்ல முடியாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட பலருக்கும் வெப் சீரிஸ்கள் கட்டற்ற


முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு

சினிமா துறையிலிருந்து வந்து முதல்வராகி இருக்கும் நடிகர் விஜயை திரைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map