மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்
2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த "காந்தா" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், "தாய் கிழவி" இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் "சேயோன்" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், “மிகவும் அன்பிற்குரிய கமல்ஹாசன் சார், உங்களின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டே வளர்ந்த, என் மனதிற்குள் இருக்கும் அந்தச் சிறுமி... நீங்கள் என் தோள்களின் மீது கைகளை வைத்து, எனக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்த அந்த நொடியில், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறேன்; உங்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.