சீரியலுக்கு குட் பை சொன்ன புதுமாப்பிள்ளை

சீரியலுக்கு குட் பை சொன்ன புதுமாப்பிள்ளை
Advertisement
எழுத்து அளவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "என்றென்றும் புன்னகை" தொடரில் ஹீரோவாக சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக். இவர், சின்னத்திரை நடிகையான அபிநவ்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணமும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான கையோடு தீபக், "என்றென்றும் புன்னகை" தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்றென்றும் புன்னகை" தொடரிலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மகிழ்ச்சி. இதே அன்பை புது சித்துவுக்கும் வழங்குங்கள். புதிய ப்ராஜெக்டில் விரைவில் சந்திக்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடரில், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்


தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்


ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map