கல்கி 2 படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி…

கல்கி 2 படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி…
Advertisement
எழுத்து அளவு


நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான படம் "கல்கி 2898 ஏடி". இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகம் பிறகு வெளியாகும் என்று சொன்னார்கள்.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இதுவரை ஆரம்பமாகவில்லை. வருடக் கடைசியில்தான் ஆரம்பமாகி அடுத்த வருடம் இரண்டாம் பாகம் வெளியாகலாம் என்று ஒரு தகவல்.

இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை, விலகிவிட்டார், நீக்கப்பட்டார் என கடந்த இரண்டு நாட்களாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. பிரபாஸ் நடிக்கும் "ஸ்பிரிட்" படத்திலிருந்து தீபிகா விலகியதால் "கல்கி 2" படத்திலிருந்தும் விலகுகிறார் என்றார்கள்.

ஆனால், இரண்டாம் பாகத்தின் 60 சதவீத படப்பிடிப்பை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கிவிட்டார்களாம். மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்புதான் நடக்க வேண்டி உள்ளதாம். தீபிகா இரண்டாம் பாகத்தில் இருக்கிறார், என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map