கிளாடியேட்டர்ஸ் : ரிலீசுக்கு தயாரான அஜித்தின் ரேஸ் ஆவணப்படம்

கிளாடியேட்டர்ஸ் : ரிலீசுக்கு தயாரான அஜித்தின் ரேஸ் ஆவணப்படம்
Advertisement
எழுத்து அளவு

அஜித்தின் பிறந்த நாளான நேற்று அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அஜித்தின் கார் ரேசை மையமாக கொண்டு உருவாக்கி உள்ள "கிளாடியேட்டர்ஸ்" என்ற டாக்குமெண்டரி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள தகவல் வெளியானது.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். "அஜித் குமார் ரேஸிங்" என்ற கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று பரிசுகள் வென்றார் அஜித். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அஜித் பங்கேற்று வரும் கார் பந்தயங்கள், அதில் செய்த சாதனைகள் போன்றவற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் வீடியோவாக ஆவணப்படுத்தி வந்தார்.

தற்போது அதற்கு "கிளாடியேட்டர்ஸ்" என்று டைட்டிலும் வைத்துள்ளனர். அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்எல்சி இதனை தயாரித்துள்ளது, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் இந்த படம் தியேட்டர்களில் அல்லது ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது. "கிளாடியேட்டர்ஸ்" என்றால் வெல்ல முடியாத வீரர்கள் என்று பொருள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன்

சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில்


ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது!

தெலுங்கில் ராம்சரண் தற்போது நடித்துள்ள படம் பெத்தி. புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜூன் நான்காம் தேதி திரைக்கு வருகிறது. கிராமப்புற விளையாட்டு கதையில் உருவாகியுள்ள


எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா, ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் அறிமுகமானார். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய அந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்திருந்தார். இந்நிலையில் அந்த

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map