இரண்டு வாரங்களில் ஜனநாயகன் ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல்

இரண்டு வாரங்களில் ஜனநாயகன் ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல்
Advertisement
எழுத்து அளவு

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நடிகர் விஜய் நடித்த கடைசி படம் "ஜனநாயகன்". வினோத் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் சார்பில் கே.வி.நாராயணன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக அப்போது வெளியாகவில்லை. அதன்பின் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்தது. தற்போது வரையிலும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் தமிழக கவர்னரை சந்தித்த போது "ஜனநாயகன்" படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட் நாராயணன் கூடவே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் இவர் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் "ஜனநாயகன்" வெளியீடு குறித்து கேட்ட போது, ‛‛ "ஜனநாயகன்" ஹீரோ இப்போது முதல்வர் ஆகிவிட்டார். அந்த படம் விரைவில் வெளியாகும். சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் படம் வரும். தணிக்கை வாரியத்துடன் பேசி வருவதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் படம் வெளியாகும்"" என்றும் கூறியுள்ளார்.

மே மாதக் கடைசியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் படத்தின் வெளியீடு இருக்க வாய்ப்புள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, சுபாஷ் கே ராஜ் இயக்க அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் பிளாஸ்ட். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்ஜூன், அபிராமி, அவர் மகளாக வரும்

மேலும் படிக்க

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வர் விஜயை சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர், கார்த்தி, பூச்சிமுருகன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து சொன்னார்கள். அப்படியே நடிகர் சங்கம்

மேலும் படிக்க

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம்

மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹபீபி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கஸ்துாரி ராஜா முக்கியமான வேடத்தில் வருகிறார். இதில் கலந்து கொண்டு

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map