படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன்

படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திய ரவி மோகன்
Advertisement
எழுத்து அளவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். அவருக்கும் அவரது காதல் மனைவி ஆர்த்திக்குமான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

சமீபத்தில் ரவி மோகனின் தோழியான கெனிஷா சென்னையை விட்டுச் சென்றார். மேலும், இனி ரவி மோகனின் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை என்றும் சொன்னார். அதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரவி மோகன் ஆவேசத்துடன் பேட்டி அளித்தார். மனைவி ஆர்த்தி குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அன்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் "பென்ஸ்" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய ரவி மோகன் அதில் கலந்து கொள்ளவில்லையாம். அவர் படப்பிடிப்புக்கு வருவாரா அல்லது படத்திலிருந்து விலகுவாரா என்பது இனிமேல் தான் தெரியும்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கிறார். "ரெமோ" படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அரசன்க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்!

அரசன்க்கு அடுத்து சிம்புவை இயக்கும் கீர்த்தீஸ்வரன்!

சிரஞ்சீவிக்காக மனம் மாறிய தியேட்டர் அதிபர்கள்

சிரஞ்சீவிக்காக மனம் மாறிய தியேட்டர் அதிபர்கள்

5 காட்சிகளை ஆரம்பித்து வைத்த முதல் படமாக பிளாஸ்ட்

5 காட்சிகளை ஆரம்பித்து வைத்த முதல் படமாக பிளாஸ்ட்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map