சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
Advertisement
எழுத்து அளவு


கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில் இவர் நடித்தாலும் அது படத்தில் "டிவிஸ்ட்" தரும் காட்சியாக இருப்பது சினிமாவுக்கே உரிய "சென்டிமென்ட்". 65 வயதிலும் சினிமாவில் சாதிக்க இளைஞனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சங்கரவேல்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...

""என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. அரசு பஸ் கண்டக்டராக இருந்து 2018ல் ஓய்வுபெற்றேன். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். 1984ல் அறிவொளி இயக்கத்தில் எழுத்தறிவித்தலுக்காக வீதி நாடகத்தில் பங்கேற்றேன். எழுத்து ஆர்வம் இருந்ததா ல் நாடகம், சிறுகதைகளும் எழுதினேன். பட்டிமன்றம்கூட 3 ஆண்டுகளாக பேசினேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. பணி ஓய்வுக்கு பின் "நடிக்கலாம்னு இருக்கேன்" என வீட்டில் சொன்னேன். "ஏம்ப்பா, ஓய்வு வாழ்க்கையை நிம்மதியா கழிக்கலாமே" என இரு மகள்களும், ஒரு மகனும் தெரிவித்தனர்.

என் மனைவியோ, "உங்கப்பா எதுசெய்தாலும் சரியாக இருக்கும்" என நம்பிக்கையூட்டினார்.

ஒரு வருஷம் கழித்து நண்பர் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் வெளிவரவில்லை. வெப் சீரியல் நடித்தேன். அதுவும் வெளியாகவில்லை. "டிவி" சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு மதுரையைச் சுற்றி எடுக்கப்படும் படங்களில் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தேன். 2023 பிப்ரவரி முதல் இதுவரை 30 படங்களில் நடித்துவிட்டேன். தனுஷ் இயக்கிய "இட்லி கடை" படத்தில் ராஜ்கிரணின் நண்பராக வந்து "சென்டிமென்டாக" டயலாக் பேசியது அனிருத், ஏ.ஆர். ரகுமான் இசை குறித்து "மீம்ஸ்" ஆக வந்தது.

அந்த படத்தில் என் கேரக்டர் குறித்து நடிகர் இளவரசு, "உங்களை சூப்பரா யூஸ் பண்ணியிருக்காங்க"னு பாராட்டினார். சிம்புதேவன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் என் மீசை, தாடியை பார்த்து நடிகர் தம்பி ராமையா அவருடைய படத்திற்கு என்னை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். சீரியலும் நடித்து வருகிறேன்.

சமீபத்தில் வெளிவந்த "தாய் கிழவி" படத்தில் என் கேரக்டர்தான் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும். என் நடிப்பை பார்த்து சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தில் சான்ஸ் கிடைத்துள்ளது. ஒவ்வொரு படமும் முக்கியத்துவம் தரும் கேரக்டராக அமைவது என் உழைப்பிற்கான பலன் என்று நினைக்கிறேன்.

மதுரையை சுற்றி சமீபகாலமாக நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. நம்மூரு கலைஞர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் மதுரையை மையமாக வைத்து சங்கரதாஸ் சுவாமிகள் கூத்துப்பட்டறை என்ற நடிப்பு பயிற்சி கல்லுாரி ஆரம்பிக்க வேண்டும் என எண்ணம் உள்ளது. அது செயல் வடிவத்தில் வருவது காலத்தின் கையில்தான் உள்ளது"" என்கிறார் சங்கரவேல்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்


ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி


போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்!

போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்!

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சென்று விடும் இவர் அங்கு வரும் நடிகர், நடிகைகளுடன் போட்டோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அடிக்கடி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map