பைலட்டை திருமணம் செய்து சிங்கப்பூரில் செட்டிலாகும் சாரா!

பைலட்டை திருமணம் செய்து சிங்கப்பூரில் செட்டிலாகும் சாரா!
Advertisement
எழுத்து அளவு


"வாணி ராணி, அழகு" ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சாரா என்கிற ஜெனிபர் பிரியா. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மன்னர் வகையறா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பெரிதளவில் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தாத சாரா, மேக்கப் ஆர்டிஸ்டாக பல சின்னத்திரை பிரபலங்களை அலங்கரித்துள்ளார். இவரது இரண்டாவது மேக்கப் ஸ்டூடியோவை நடிகர் விஜய் சேதுபதி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த துநேசன் என்பவரை சாரா திருமணம் செய்ய உள்ளார். துநேசன் சிங்கப்பூரில் பைலட்டாக வேலை பார்ப்பதோடு அங்கேயே குடியுரிமையும் வைத்துள்ளார். எனவே, திருமணத்திற்கு பிறகு சாரா தனது மேக்கப் அகாடமியை சிங்கப்பூரிலேயே தொடரவுள்ளார். மேலும், சின்னத்திரையில் மேக்கப், நடிப்பு என எந்த வாய்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு வந்து செல்லவும் முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறாராம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map