குக் வித் கோமாளியை மிஸ் பண்ணும் மணிமேகலை

குக் வித் கோமாளியை மிஸ் பண்ணும் மணிமேகலை
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி "குக் வித் கோமாளி". சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சமையலும், நகைச்சுவையும் கலந்த ஒரு நிகழ்ச்சி.

"பிக் பாஸ்" நிகழ்ச்சியை விடவும் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கிறது என்பதே டிவி பார்க்கும் பலரின் கருத்தாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் தனித்து காமெடி செய்து ரசிகர்களைப் பெற்றுள்ளவர் இவர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிகழ்ச்சியில் தான் பங்கு பெறப் போவதில்லை என மணிமேகலை தெரிவித்துள்ளார்.

அது குறித்து இன்ஸ்டாகிராமில், “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் படிச்சேன், நல்லா இருந்தது இந்த மேற்கோள். எனக்கு குட்டி விபத்து ஏற்பட்டிருக்கு, ஆனால், இப்போது நலமாக இருக்கிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வேன். நிச்சயம் எனது குழுவை மிஸ் செய்வேன், ஒரு வாரத்தில் திரும்ப வந்துவிடுவேன், உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கிய குறிப்பு - முக்கியமா சுடு தண்ணி தூக்கும் போது பாத்து தூக்குங்க,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுடு தண்ணி தூக்கும் போது அந்தப் பாத்திரம் தவறி கீழே விழுந்து மணிமேகலைக்கு காயம்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதைத்தான் அவர் குட்டி விபத்து எனக் குறிப்பிட்டுள்ளால் போலும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்

வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக

மேலும் படிக்க

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல்

யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்

மேலும் படிக்க

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map