மத கஜ ராஜா - விமர்சனம்

தயாரிப்பு - விஷால் | இயக்கம் - சுந்தர்.சி

Published

மத கஜ ராஜா

மத கஜ ராஜா

2 மணி நேரம் 13 நிமிடம்
★★★★★
★★★★★
3
  • விஷால்
  • அஞ்சலி
  • ஜன 12, 2025
  • சுந்தர்.சி
  • மத கஜ ராஜா - காமெடி ராஜாக்கள், கலக்கல் ராணிகள்…
தயாரிப்பு - ஜெமினி பிலிம் சர்க்யூட்
இயக்கம் - சுந்தர் சி
இசை - விஜய் ஆண்டனி
நடிப்பு - விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி
வெளியான தேதி - 12 ஜனவரி 2025
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ஒரு திரைப்படம் ஆரம்பமாகி, உருவாகி முடிந்து வெளிவருவது என்பது சாதாரண விஷயமல்ல. மற்ற வியாபாரங்களை விடவும் சினிமா வியாபாரம் என்பது சிரமம் வாய்ந்த ஒன்று. அதனால், பல படங்கள் வெளிவராமல் இன்னும் முடங்கிக் கிடக்கின்றன. அப்படி 12 வருடங்களாக முடங்கிக் கிடந்த படம் இன்று வெளிவருகிறது என்பது தமிழ் சினிமாவில் நடக்காத ஒன்று.

வேறு ஒரு படத்தின் தோல்விக்காக இந்தப் படத்தின் வெளியீட்டை இத்தனை வருடங்களாகத் தடுத்து வைத்திருந்தனர். திரையுலகில் உள்ள சிலரது முயற்சியால் அந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து இன்று படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சுந்தர் சி இயக்கும் படம் என்றாலே ஒரு என்டர்டெயின்மென்ட் நிச்சயம் இருக்கும் என்பதை கடந்த 30 வருடங்களாகக் காப்பாற்றி வருகிறார். அது போல இந்தப் படத்தையும் ரசிக்கும்படியான ஒரு படமாக எடுத்திருக்கிறார். இந்தக் காலத்திலும் புதிய படங்களை பழைய பார்முலாவில் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் பழைய பார்முலாவாக இருந்தாலும் பக்காவான பார்முலாவாக இருக்கும் இந்தப் படம் இரண்டு மணி நேரமும் தியேட்டரில் சிரித்து கொண்டாட வைக்கிறது.

தங்களது ஆசிரியர் மகளின் திருமணத்திற்குச் செல்கிறார்கள் விஷாலும், அவரது நண்பர்களும். விஷாலின் நண்பர்களில் சடகோபன் ரமேஷ் சப் கலெக்டராக இருந்து சஸ்பென்ட் ஆனவர். மற்றொரு நண்பரான நிதின் சத்யா ஒரு தொழிலில் நஷ்டமடைந்து தவிப்பார். டிவி சேனல்கள், பத்திரிகைகள், பல பிசினஸ்கள் நடத்தி மாநில ஆட்சியையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சோனு சூட் தான் இவர்களது நிலைக்குக் காரணம். சென்னை சென்று சோனுவை எதிர்த்து நின்று தன் நண்பர்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறார் விஷால். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்குரிய முழுமையான கதாபாத்திரம். காதல், ஆக்ஷன், நட்பு, காமெடி கலந்த கதாபாத்திரத்தில் விஷால். அந்தக் காலத்தில் இப்படியான கதாபாத்திரங்களில்தான் அவர் நடித்து வந்தார். அவர் மட்டும் என்ன அப்போதைய ஹீரோக்கள் பலரும் இப்படியான படங்களில்தான் நடித்தார்கள். ஆரம்பத்தில் அஞ்சலி மீது காதல், பின்னர் வரலட்சுமி மீது காதல், நண்பர்களுக்காக களம் இறங்குவது என காதலுக்கும், நட்புக்கும் முக்கியத்துவமான கதாபாத்திரம். விஷாலுக்குப் பொருத்தமாக அமைந்து, அவரும் அதற்கேற்றபடி நடித்து ரசிக்க வைக்கிறார்.

படத்தின் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணம் சந்தானம். அந்தக் காலத்தில் நம்பர் 1 காமெடி நடிகராக இருந்தார். அந்த சந்தானத்தை இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்ப்பது ரசிர்களுக்கான காமெடி கலாட்டா. சந்தானம் அப்படியே காமெடியனாகவே இருந்திருக்கலாமே என படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது.

படத்தில் இரண்டு கதாநாயகிகள் அஞ்சலி, வரலட்சுமி. இருவரையும் காதலுக்காக நடிக்க வைத்ததை விட கிளாமருக்காக நடிக்க வைத்ததுதான் அதிகம். அதிலும் வரலட்சுமியின் கிளாமர் காட்சிகள் வின்டேஜ் டைப். இருவரும் நடனமாடும் இரண்டு பாடல்களும் ஆட்டம் போட வைப்பவை.

மனோபாலா, சந்தானம், விஷால் சம்பந்தப்பட்ட ஒரு 20 நிமிடக் காட்சி, நம்ப முடியாத ஒன்றாக இருந்தாலும் அவ்வளவு நேரமும் சிரித்து ரசிக்க வைக்கிறது. மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு என மறைந்த நடிகர்களை மீண்டும் திரையில் பார்ப்பது நெகிழ்ச்சி. விஷால் நண்பர்களாக சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா நடித்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளியாக சோனு சூட், கோட் சூட் உடன் வில்லத்தனம் செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ஆர்யா, சதா வந்து போகிறார்கள்.

விஜய் ஆண்டனி இசையில் சிக்கு புக்கு, மை டியர் லவ்வரு பாடல்கள் அப்போதே ஹிட்டானவை. விஷுவலாகப் பார்க்கும் போது இப்போதும் புதிதாக இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்திற்கு பிளஸ் பாயின்ட். கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் ரிச்சர்ட் எம் நாதன்.

படத்தில் என்ன குறை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திரையில் நம் கண்களை வேறு விதத்தில் அலையவிட்டுள்ளார் இயக்குனர். இத்தனை வருடங்களுக்குப் பிறகு விமோசனம் கிடைத்துள்ள படம், இதில் குறை கண்டுபிடித்து என்ன நடக்கப் போகிறது. பொங்கல் விடுமுறையில் தியேட்டருக்குப் போய் கொண்டாடிவிட்டு வருவோம்.

மத கஜ ராஜா - காமெடி ராஜாக்கள், கலக்கல் ராணிகள்…

Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Published on 2025
மத கஜ ராஜா

மத கஜ ராஜா

Published on 2024
அரண்மனை 4

அரண்மனை 4

Published on 2022
காபி வித் காதல்

காபி வித் காதல்

Published on 2019
ஆக்ஷன்

ஆக்ஷன்

Published on 2016
முத்தின கத்திரிக்கா

முத்தின கத்திரிக்கா

Published on 2015
ஆம்பள

ஆம்பள

Published on 2014
அரண்மனை

அரண்மனை

Published on 2013
தீயா வேலை செய்யணும் குமாரு

தீயா வேலை செய்யணும் குமாரு

Published on 2012
கலகலப்பு

கலகலப்பு

மேலும் விமர்சனங்கள்

ஈகோ ராமன் 2026

ஈகோ ராமன்

தயாரிப்பு : அஸ்ருதா புர டக் ஷன்ஸ்இயக்கம் : கணேசன் நாச்சிமுத்துநடிப்பு : ரோபோ சங்கர், சிபி புவனசந்திரன்,

காட்டாளன் 2026

காட்டாளன்

தயாரிப்பு : கியூப் என்டர்டெயின்மென்ட்இயக்கம் : பால்ஜார்ஜ்நடிப்பு : ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், கபீர்

பிளாஸ்ட் 2026

பிளாஸ்ட்

தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட்இயக்கம் : சுபாஷ் கே ராஜ்நடிப்பு : அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன்,

திரிஷ்யம் 3 2026

திரிஷ்யம் 3

தயாரிப்பு ; ஆசிர்வாத் சினிமாஸ்இயக்கம் ; ஜீத்து ஜோசப்நடிப்பு ; மோகன்லால், மீனா, பிஜுமேனன், அன்சிபா ஹாசன், எஸ்தர்

அதிரடி (மலையாளம்) 2026

அதிரடி (மலையாளம்)

தயாரிப்பு : பசில் ஜோசப், டாக்டர் அனந்து. எஸ்இயக்கம் : அருண் அனிருத்தன்நடிப்பு : டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினித்

சட்டென்று மாறுது வானிலை 2026

சட்டென்று மாறுது வானிலை

தயாரிப்பு : பிவி பிரேம்ஸ்இயக்கம் : பாபு விஜய்நடிப்பு : ஜெய், மீனாட்சிகோவிந்தராஜன், யோகிபாபு, கருடா

கருப்பு 2026

கருப்பு

தயாரிப்பு : டீரிம் வாரியர் பிக்சர்ஸ்இயக்கம் : ஆர்.ஜே.பாலாஜிநடிப்பு : சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா, நட்டி,

29 2026

29

தயாரிப்பு : ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ, ஜி ஸ்குவார்டுஇயக்கம் : ரத்னகுமார்நடிப்பு : விது, ப்ரீத்திஅஸ்ராணி, மாஸ்டர்

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map