மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டி சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் பருத்தி தோட்டம் உள்ளது. இன்று அங்கு பருத்தி எடுக்கும் பணி நடந்தது. அதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலையில் அங்கு திடீரென மழை பெய்ய தொடங்கியதால், பணியாளர்கள் மழைக்கு ஒதுங்கினர். அருகே உள்ள புளியமரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கிய போது மரத்தில் மின்னல் தாக்கியது. அதில் ராமுத்தாய், தனிக்கொடி மற்றும் கணபதி என்ற 3 பெண்களுக்கும் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக இறந்தனர். வாசியம்மாளும் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.