தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் மூல்ம் மதுபானங்களை விற்கிறது. இந்நிறுவனம், 11 மதுபான தயாரிப்பு ஆலைகளில் இருந்து மது வகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது. மாதம் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. மது கடைகளில், எந்த நிறுவன தயாரிப்பு மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அதற்கு ஏற்ப, அந்த நிறுவனத்திடம் இருந்து, மது வகைகளை அதிகம் வாங்கி விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.