திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் தேவபிரகாஷ். கடந்த 18ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது அவரது வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட துருப்பிடித்த இரும்பு குண்டு சிக்கியது. பார்க்க பழைய வெடிகுண்டு போல தெரிந்தது. இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. சோதனையில் அது வெடிக்காத குண்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. உலகப்போர் காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.