தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதுடன், இளைஞர்களின் நலன் கருதி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரசாரம் செய்தனர். ஆனால், 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என கோவையை சேர்ந்த தொழில் முனைவோர் கிருத்திகா கூறினார்.