ஏன் என் வீட்டில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தவில்லை. ஏன் நான் கைது செய்யப்படவில்லை என்று தொடர்ந்து ராகுல் கேட்டு வந்தார். இந்த சோதனை ராகுலுக்கும், அவரை போன்ற தலைவர்களுக்கும் மன திருப்தியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். மத்தியில் பாஜ ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின், நாடு முழுவதிலும் உள்ள எதிர்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, ஈடி போன்ற மத்திய ஏஜென்சிகளை பாஜ ஏவி விடுகிறது